இலண்டனில் இருந்து யாழ். வந்திருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
யாழ். - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று (07.07.2023) பிற்பகல் கடலுக்குச் குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

பிரேத பரிசோதனை
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில்
உயிரிழந்துள்ளார்.
இலண்டனில் இருந்து உறவினரின் மரணச் சடங்குக்கு வந்திருந்த குருபரன் ஆரூஸ் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri