கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்த இளைஞன் பலி
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கட்டுமானப் பணி
கட்டுமானப் பணியின் போது, மூன்றாவது மாடியில் இரும்புப் பகுதியை பொருத்த முயன்ற போதே விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கியதால் அவர் கீழே விழுந்துள்ளார். இதன் போது பலத்த காயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.