கோர விபத்தில் சிக்கிய 23 வயது இளைஞன் பலி
நாத்தண்டிய - மாதம்பே பிரதான வீதியின் குடாவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் குடாவெவ பகுதியை சேர்ந்த 23 வயதான தரிந்து ஹஷான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நாத்தண்டிய பகுதியில் இருந்து மாதம்பே நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறியுடன், அதற்கு எதிர்த்திசையில் இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
இளைஞன் பலி
அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் முன்பகுதியில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடந்த ஸ்தலத்திலேயே மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினால் மோட்டார் சைக்கிளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri