அக்கரைப்பற்றில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு சிறுவன் பலி
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கண்ணகி கிராமத்தை சேர்ந்த16 வயதுடைய பெ.ஜீரோசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த சிறுவன் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்பரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இன்றைய தினமும் சில ஏக்கர் வயல்நிலங்களை உழுதுவிட்டு நண்பரின் உழவு இயந்திரத்தில் ஏறி அருகில் இருந்தபோது தவறி வீழ்ந்து வயலை இரட்டிப்பாக்கும் கலப்பைக்குள் அகப்பட்டு நசுங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
