வெடிமருந்து நிரப்பும் துப்பாக்கி வெடித்து 14 வயது சிறுவன் பலி!
மாத்தளை - அம்பன்பொல பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து நெற்பயிர்களைப் பாதுகாப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பும் துப்பாக்கி வெடித்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்றைய தினம் (22.06.2023) இடம்பெற்ற இந்த வெடி சம்பவத்தில் மற்றுமொரு பாடசாலை மாணவன் படுகாயமடைந்துள்ளதாகவும் அம்பன்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 வயதுடைய திலும் லக்ஷித எனும் பெயர் கொண்ட பாடசாலை மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இரத்த வௌ்ளத்தில் கிடந்த சிறுவன்
சம்பவ தினத்தன்று தாயும் தந்தையும் நெல் வயலைப் பாதுகாக்கச் சென்றபோது, தங்கள் கையில் இருந்த வெடிமருந்து நிரப்பும் துப்பாக்கியைக் குடிசைக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
சிறுவன் அதனை எடுக்க முற்பட்ட போது, துப்பாக்கி தவறுதலாகக் கீழே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுப் பெற்றோர் ஓடிவந்து பார்த்தபோது சிறுவன் இரத்த வௌ்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளான்.
உடனடியாக கல்கமுவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




