மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை: நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
பொரளை - லேடிரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் சிறுநீரகங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை, பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய பிறப்பித்துள்ளார்.
இன்றைய தினம் (04.08.2023) பிறப்பித்துள்ள உத்தரவில், உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் சிறுநீரகங்கள் தொடர்பில் மருத்துவ அறிக்கைகளுக்கும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பரிசோதனை அறிக்கைகள்
மருத்துவ பரிசோதனைகளில் சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் பிரேத பரிசோதனையில் ஒரு சிறுநீரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வேண்டுகோளை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை அறிக்கை இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கும்போது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஒரு சிறுநீரகம் என ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுநீரக சத்திரசிகிச்சை
கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயதான சிறுவன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறுநீர்த் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 30-07-2023 அன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri
