கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மற்றுமொரு மரணம் பதிவு
வயிற்று வலி காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த தர்கா நகரினை சேர்ந்த 10 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மரணத்திற்கான காரணம்
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் வயிற்று வலி மற்றும் வாந்தி எடுத்ததன் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக தர்கா நகர வைத்தியசாலைக்கும் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பின்னர் பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் களுத்துறை வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் நோய் கண்டறியப்படவில்லை எனவும் சிகிச்சை பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
