தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி
கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு (12.3.2024) யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் மோதி விபத்து
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், ரிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan