வாகன விபத்தில் 7 வயது சிறுவன் பலி: தந்தை படுகாயம்
கொழும்பு - மகரகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் மகரகம பகுதியில் நேற்று (26.10.2023) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரால் கைது
மோட்டார் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய லோகேஸ்வரன் சயந்தன் என்ற சிறுவனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற உயிரிழந்த சிறுவனின் தந்தையான 38 வயதுடைய ராமச்சந்திரன் லோகேஸ்வரன் என்பவர் படுகாயங்களுடன் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட தந்தையும் மகனும் நீர்கொழும்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரின் சாரதி சிறு காயங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
