எல்பிட்டிய பகுதியில் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு
பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் எல்பிட்டிய - ஓமட்ட பகுதியில் இன்று (7.1.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புஷ்பகே திலான் தனுஷ்க என்ற 31 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
எல்பிட்டியவில் இருந்து சென்ற தனியார் பேருந்தும், ஓமட்டவில் இருந்து எல்பிட்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று எல்பிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காலி நகரில் தேசிய மக்கள் சக்தி மகளிர் குழு கூட்டத்துக்கு கட்சி உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் எல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
