யாழ். நல்லூர் பகுதியில் பேருந்தில் தவறி விழுந்து இறந்த இளைஞன் - ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை.
யாழில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த விபத்தில் 29 வயதுடைய சிலையடி - கற்சிலைமடு ஒட்டுசுட்டான் முல்லைத்தீவினை சேர்ந்த அழகராசா நிதர்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்
இந்நிலையில், விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
இதேவேளை வடக்கு மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் அனைத்து மினி பேருந்து உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவுறுத்தல்களை பின்பற்றாத பேருந்துகளின் வழிதட அனுமதி நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் தெரிவித்தார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
