கிளிநொச்சி பகுதியில் மீட்க்கப்பட்ட இளைஞனின் சடலம்: நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (20.01.2024) பன்னங்கண்டி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் மேலும் தெரியவருகையில், பன்னங்கண்டி பிரதான வீதியில் பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியோரத்தில் இருந்து இளைஞனின் சடலம் பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், சடலம் தொடர்பில் பொதுமக்கள் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.ஆர.ஐ ஜெமில் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி மருதநகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜெயராம் தினேஷ் என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri