யாழ். சிறுப்பிட்டியில் இளைஞன் மீது பட்டப்பகலில் வாள்வெட்டு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி சிறுப்பிட்டிப் பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.
நேற்றுப் பகல் (01.10.2023) இடம்பெற்ற குறித்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான லக்சன் என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வன்முறைக் கும்பல்
நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் சிறுப்பிட்டியில் திருமணம் செய்து வசித்து வருகின்றார்.

இந்த நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இந்த நபரை விரட்டிச் சென்று நேற்றுப் பகல் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
தப்பியோடிய நபர் சிறுப்பிட்டி வைரவர் கோயிலுக்குள் புகுந்த போதும் அங்கு வைத்தும் அவரை வாளால் வெட்டி விட்டு வன்முறைக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
வீதியில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri