தன்னை கடத்தியதாக பொய் நாடகம் ஆடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி
காவத்தையில்
சிறுவனொருவன் தன்னை வான் ஒன்றில் கடத்தி வந்தாக பொய்யான முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளமை தொடர்பில் குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த சிறுவனின் தாயார் தனது 17 வயதுடைய மகனை காவத்தையிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பிய நிலையில் பணத்தை தொலைத்துவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதேவேளை சிறுவன் வீடு செல்ல அச்சம் காரணமாக அங்கிருந்து மட்டக்களப்பிற்கு தப்பி சென்றதையடுத்து தன்னை காவத்தையிலிருந்து வான் ஒன்றில் கடத்திவரப்பட்டதாகவும் வானில் இருந்து தான் தப்பி ஓடிவந்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மேலும் வானில் கடத்தி சென்று தன்னை வீடு ஒன்றில் கட்டிவைத்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த போது கடுமையாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து இன்று கறுப்பு வானில் ஏற்றி வந்த நிலையில் அதிலிருந்து தப்பி ஓடி வந்துள்ளதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த பண்டார
காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இச்சிறுவன் தொடர்பில் விசாரித்தபோது கடத்தப்பட்டதாக எந்தவித முறைப்பாடும்
இல்லை எனவும் இவ்வாறு 3 தடவை வீட்டில் இருந்து பணத்தை எடுத்து தப்பி
ஓடியவர் எனவும் காவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்களை தொடர்பு கொண்டு வரவழைக்கப்பட்டதையடுத்து இன்று (18.05.2023) பொலிஸ் நிலையத்திற்க்கு வந்த உறவினர்களிடம் சிறுவனை எச்சரித்து ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |