இலங்கை பின்நோக்கிப் பயணித்தமைக்கு இவர்களே பொறுப்புக்கூற வேண்டும்! பொன்சேகா குற்றச்சாட்டு
சுதந்திரமடைந்த பின்னர் இந்நாடு பின்நோக்கிப் பயணித்தமைக்கு நாட்டை மாறி, மாறி ஆண்ட இரு கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
நாடு சுதந்திரமடைந்தபோது இலங்கை சிறந்த மட்டத்தில் இருந்தது. அதன்பின்னரும் ரூபாவின் பெறுமதி பாதுகாக்கப்பட்டது. இன்று எமது நாட்டு நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.
கறுப்பு சந்தையில் 250 ரூபாவுக்கு டொலரை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களும் அரசியல்வாதிகளை முழுமையாக நம்பாமல், சிந்தித்து, தகுதியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நாடு மேம்படும். இங்கு
ஆட்சிகள் மாறும்போது கொள்கைகளும் மாறுகின்றன. இந்நிலைமை மாறவேண்டும். நாட்டைக்
கட்டியெழுப்புவதற்கான உறுதியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri