ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ள முக்கிய கட்டணம்! வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக்கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பெரியவர்களுக்கு 200 ரூபாயும், குழந்தைகளுக்கான நுழைவுக் கட்டணமாக 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. முன்பு பெரியவர்களுக்கு ரூ.100, குழந்தைகளுக்கு ரூ.20 என கட்டணம் விதிக்கப்பட்டது.
மேலும் தாவரவியல் பூங்காவிற்கு வெளிநாட்டு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,000 ரூபாவாகவும் வெளிநாட்டு சிறுவர்களுக்கு அதே கட்டணம் 1,500 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்பு வெளிநாட்டு பெரியவர்களுக்கு ரூ.2,000, குழந்தைகளுக்கு ரூ.1,000 வசூலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
