சமூக இடைவெளி விதி நீக்கப்படலாம்! பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு
ஜூன் 21 முதல் ஒரு மீட்டர் மற்றும் சமூக இடைவெளி விதி நீக்கப்படலாம் எனவும், ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஹார்ட்ல்புலில் ஒரு பிரச்சார விஜயத்தின் போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். சமூக இடைவெளியை கடைப்பிடித்ததன் மூலம் நல்ல வாய்ப்பை பெறமுடிந்ததாவும் அவர் இதனை போது கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தரவை பொறுத்தே சமூக இடைவெளி விதி நீக்கப்படலாம் எனவும், இதை இன்னும் திட்டவட்டமாக கூற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்,
கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் சாலை வரைபட திட்டத்தின் கீழ், ஜூன் 21ம் திகதி என்பது சமூக தொடர்பு தொடர்பான அனைத்து சட்ட வரம்புகளும் நீக்கப்படும் நாளாகும்.
எனினும் சில தனித்தனி நடவடிக்கைகள் - முகமூடி அணிவது போன்றவை - அந்த இடத்திற்கு அப்பால் தொடரலாம் என்ற பரிந்துரைகள் உள்ளன.
இதேவேளை, பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,946 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 4 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,423,796 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 127,543 ஆக அதிகரித்துள்ளது.
61,481 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 185 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,234,772 பேர் நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.