போரிஸ் ஜோன்சன் குறித்து வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய புகைப்படம்
கொரோனா முடக்கத்தின் போது டவுனிங் வீதியில் இடம்பெற்ற நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மது அருந்தியபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஐடிவி நியூஸ் நான்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த புகைப்படங்கள் 2020 நவம்பர் 13ம் திகதி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை அலுவலகம் மற்றும் பொலிஸாருக்கும் இந்த புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் கிடைத்திருக்கும் என பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவருக்கு பொலிஸார் அபராதம் விதித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

புகைப்படங்கள் வெளியான பின்னர், தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் ஏஞ்சலா ரெய்னர், பிரதமர் தனது அலுவலகத்தை இழிவுபடுத்தியுள்ளார் என்றும் பிரிட்டிஷ் மக்கள் சிறந்தவர்கள் என்றும் கூறினார்.
சட்டத்தை மீறுவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று ஜோன்சன் மீண்டும் மீண்டும் கூறினார், இப்போது சந்தேகம் தீர்ந்துவிட்டது, அவர் பொய் கூறியுள்ளார். போரிஸ் ஜோன்சனே விதிகளை உருவாக்கினார், பின்னர் அவற்றை மீறியுள்ளதாக ஏஞ்சலா ரெய்னர் தெரிவித்தார்.

இதனிடையே, போரிஸ் ஜோன்சன் "பிரிட்டிஷ் மக்களை முட்டாள்களாக ஆக்கியுள்ளார்" என்று படங்கள் காட்டுவதாக லிபரல் டெமாக்ராட் கட்சியின் துணைத் தலைவர் டெய்சி கூப்பர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் SNP இன் இயன் பிளாக்ஃபோர்ட் அவரை "சார்லடன் மற்றும் பொய்யர்" என்று போரிஸ் ஜோன்சனை அழைத்துள்ளார்.
இதனிடையே, குறித்த இரு அரசியல் தலைவர்களும் போரிஸ் ஜோன்சனை பதவியில் இருந்து நீக்குமாறு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Image Credit ITV
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam