நாடு திரும்பிய போரிஸ் ஜோன்சன்! விமானத்தில் கடும் எதிர்ப்பு
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,முன்னாள் பிரதமரான போரிஸ் ஜோன்சன் தமது மனைவியுடன் கரீபியன் தீவு ஒன்றில் விடுமுறையை கழித்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளார்.
இதன்போது போரிஸ் ஜோன்சன் மீண்டும் போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் சத்தமிட்டு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடும் எதிர்ப்பு
பிரித்தானிய துணைப்பிரதமர் டொமினிக் ராப் போரிஸ் ஜோன்சன் போட்டியிடுவதை எதிர்த்துள்ளார். "நாம் முன்னோக்கி செல்ல வேண்டும், பின்னோக்கி செல்லக்கூடாது. முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பொருளாதார அனுபவம் வாய்ந்த தனித்துவமான வேட்பாளர்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் ரிஷி சுனக், பென்னி மோர்டான்ட், போரிஸ் ஜான்சன் போன்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய நபர்கள் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரிஷி சுனக் நேற்று 104 எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுள்ளார். மற்றொரு முன்னாள் நிதி மந்திரியான சாஜித் ஜாவித், பாதுகாப்பு மந்திரி டாம் டுகன்தாட், முன்னாள் துணைப்பிரதமர் டொமினிக் ராப் உள்ளிட்டோர் ஆதரவு கிடைத்துள்ளது.
போரிஸ் ஸோன்சனுக்கு நேற்று வரை 47 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்துள்ளது. விடுமுறைக்காக சென்றிருந்தவர், லண்டன் திரும்பிய உடன் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் கவனம் செலுத்துவார் என நம்பப்படுகின்றது.
இவருக்கு இந்திய வம்சாவளியான முன்னாள் உள்துறை மந்திரி பிரிதி பட்டேல், வர்த்தக மந்திரி ஜேக்கப் ரீஸ், போக்குவரத்து மந்திரி ஆனி மேரி டிரிவெல்யான் ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளது.