பொரள்ளை கைக்குண்டு சம்பவம்:மருத்துவருக்கு விளக்கமறியல்
கொழும்பு பொரள்ளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மருத்துவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மூன்றாவது சந்தேக நபரான பிலியந்தலையை சேர்ந்த ஷர்லி தயானந்த ஹேரத் என்ற மருத்துவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் கொழும்பு பதில் நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.



