போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சபை அமர்வின்போது ஆர்ப்பாட்டம்

Government Protest Batticaloa Fertilizer
By Rusath Nov 12, 2021 12:26 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச சபை அமர்வின்போது பதாகைகளை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் 45வது சபை அமர்வு வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் யோ.ராஜனி தலைமையில் இன்று(12) நடைபெற்றுள்ளது.

இதன்போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் கலந்து கொண்ட உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள், வீதி மின் விளக்குகள் பொருத்துதல், பழுகாமத்தில் அமைந்துள்ள திண்மக் கழிவகற்றும் இடம், பழுகாமத்தில் அமைந்துள்ள வண்ணான் குளத்தில் மீன் வளர்த்தல், நூலகங்களில் அமைந்துள்ள புத்தகங்கள் காணாமல் போனமை மற்றும் பழுதடைந்துள்ளமை, வெல்லவெளி பொலிஸாரின் நடவடிக்கைகளில் திருப்தியின்மை, பிரதேச சபையின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடி, காட்டு யானைகளின் பிரச்சனைகள், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


இந்நிலையில் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, உறுப்பினர்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

பருவத்தில் பச்சை வழங்கா பயிரும் மண்ணாகும் பசளை வழங்கா அரசும் வீணாகும், சீனி அரிசி சீமெந்து விலை அதிகரிப்பை நிறுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் அவதியுறும் ஏழை விவசாயிகள், பசளை இன்றி பயிர் இல்லை விவசாயம் இன்றி நாடு இல்லை, அரசே அரசே உரத்தைக் கொடு, உள்ளிட்ட பல வாசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கோசங்களையும் சபை அமர்வின்போது எழுந்து நின்று இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் சு.விக்னேஸ்வரன் அந்த ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்து கதிரையை விட்டு எழும்பாமல் அமர்ந்தபடியே இருந்தார்.

இறுதியில் மேற்படி பிரதேச சபையின் முன்னால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அமைத்துள்ள சோதனைச் சாவடி, மற்றும் வீதித் தடை, ஆகியன பிரதேச சபைக்கு வரும் மக்களுக்கும், அதன் அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், மற்றும் அதனருகில் அமைந்துள்ள ஆலயம் ஆகியவற்றுக்கும் பெரும் இடைஞ்சலாக இருந்து வருவதாகத் தெரிவித்து அதனை தவிசாளர் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டு உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்று உறுப்பினர்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இரு உறுப்பினர்களையும், சுயேட்சைக்குழு இரு உறுப்பினர்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு உறுப்பினரையும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஒரு உறுப்பினரையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு உறுப்பினரையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US