கொழும்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
எதிர்வரும் நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டத்தின் சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் திலிப் லியனகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌயிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் 30 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. அதனை இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டிற்குள்ளாகுவதனை தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி பாதுகாப்பளிப்பதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக, கொழும்பு மாவட்டத்தின் சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் திலிப் லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 19 மணி நேரம் முன்

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
