“தெ புக்கர்“ நாவல் போட்டியில் இலங்கையரான அனுக் அருட்பிரகாசத்தின் வெற்றி கை நழுவியது
இலங்கை வம்சாவளியான அமெரிக்காவில் வசிக்கும் நாவலாசிரியரான அனுக் அருட்பிரகாசம் பங்கேற்ற “தெ புக்கர்” நாவல் போட்டியின் முடிவு வெளியாகியுள்ளது.
அந்தப்போட்டியில் தென்னாபிாிக்க நாவலாசிரியரான டேமன் கல்குட்( Damon Galgut )டின் தெ ப்ரோமிஸ்( The promise) என்ற நாவல் வெற்றிப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கான 50ஆயிரம் பவுண்ஸ் பணப்பாிசு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படவுள்ளது.
இந்த வருடத்துக்கான புக்கா் பரிசை வென்றுள்ள தென்னாபிாிக்காவின் Damon Galgut ஏற்கனவே 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் புக்கா் பரிசுக்கான தோ்வாளா்களில் இடம்பெற்றிருந்தார்.
தெ புக்கா் நாவல் பாிசுக்கான நாவல் தெரிவுகளில், அனுக் அருட்பிரகாசத்தின் ஒரு வடக்குப் பாதை என்ற அர்த்தம் கொண்ட ஏ பெசேஜ் நோத் உட்பட்ட நான்கு நாவல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பிரசித்தம் பெற்ற “தெ புக்கா்“ நாவல் பாிசு வருடந்தோறும் இங்கிலாந்தில் சிறந்த ஆங்கில நாவலுக்காக வழங்கப்பட்டுவருகிறது.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam