மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் நூல் வெளியீட்டு விழா
மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய "மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயராய்வு நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நூலானது நேற்று (23) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினரான மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் , சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மடு பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆய்வு நூல்
இந்த நூலானது மகா வம்ச விஜயனும் 700 தோழர்களும் இலங்கையில் வந்து இறங்கிய இடமானது மன்னார் கட்டுக்கரை பிரதேசம் என்பதை சங்க கால இலக்கிய நூல்களான கம்பராமாயணம், தொல்காப்பியம் உட்பட மகாவம்ச நூல்களின் ஆதாரத்தோடும் தற்கால வரலாற்று ஆசிரியர்கள் வெளியீடு செய்த நூல்களின் துணையோடு கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த கட்டுக்கரை பிரதேசத்தின் தோற்றம், வளர்ச்சி, அதன் சிறப்பு குன்றியதற்கான காரணங்களை கம்பராமாயணம், மகாவம்ச நூல்கள் கூறும் இடப்பெயர்களையும், தற்போது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இடப்பெயர்களையும் ஒப்பிட்டு ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது.
இந்த நூல் ஆய்வினை மன்னார் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் மன்னார் ஊடகவியலாளர்கள், கல்வியாலாளர்கள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.