பதவியிலிருந்து வெளியேற்ற சதி - கோட்டாபய வெளியிடும் புத்தகம்
பதவியில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புத்தகமொன்றை எழுதியுள்ளார்.
'என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி' என்று குறித்த புத்தகத்துக்கு அவர் பெயரிட்டுள்ளதோடு புத்தகம் நாளை (07.03.2024) கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
மேலும், இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியினுடைய விலை 1,800 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் உள்ளடக்கம்
அத்துடன், "இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு மற்றும் இலங்கைச் சமூகத்தின் பல குறிப்பிட்ட பிரிவினரின் பங்கேற்புடன் தொடங்கப்பட்ட சதிகள் மற்றும் வன்முறை போராட்டங்கள் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதைப் பற்றியதாகும்" என்று புத்தகத்தின் பின் அட்டையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri