ரவி கருணாநாயக்க மீதான பினைமுறி மோசடி வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அவருக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (15.03.2023) சட்டமா அதிபருக்கு இவ் உத்தரவை வழங்கியுள்ளது.
தமித் தோட்டவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குற்றச்சாட்டை நீடிக்க முடியாது
ரவி கருணாநாயக்கவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ தனது கட்சிக்காரருக்கு எதிரான குற்றச்சாட்டை நீடிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்போது தீர்ப்பின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை ஆராய்ந்த நீதியரசர் தமித் தோட்டவத்த மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் தீர்மானம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளதால் சட்டமா அதிபர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
