பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இதுவரையில் 12 பேர் பலி
பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் (Dera Ismail Khan) நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையினரே என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பு
பாக்கிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு வீதியோரக் காவல் சோதனைச் சாவடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று சோதனைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்யப்பட்டதாக, அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும் பாகிஸ்தான் தலிபான் (TTP) மீது சந்தேகம் வலுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.