வாக்னர் கூலிப்படைத்தலைவர் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு! வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்கள்
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்ததாக கூறப்படும் எம்ப்ரேயர் 600 வணிக ஜெட் விமானம் ரஷ்யாவின் Tver பிராந்தியத்தில் உள்ள போலோகோவ்ஸ்கி மாவட்டத்தில் தரையில் விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது.
வாக்னர் கூலிப்படைத்தலைவரின் மரணத்தின் பின்னணியில் புடின் இருக்கக்கூடும் என பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
வெடிகுண்டு அச்சுறுத்தல்
இந்நிலையில், Prigozhin பயணித்த விமானம் புறப்படுவதற்கு முன்னர் அந்த விமானத்தில் விலையுயர்ந்த பொதியொன்று ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பொதியில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் இரண்டு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக விமான விபத்தினை பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.