ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு
ஜேர்மனின்(Germany) பிராங்பர்ட் விமான நிலையத்தில் கட்டுமான பணிக்காக பணியாளர்கள் நிலத்தை தோண்டும்போது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் உடனடியாக நான்கு ஓடுபாதைகளும், ஒரு நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பான முறை
அதனால், விமானங்கள் புறப்பாடு முதலான விடயங்களில் தாமதம் ஏற்படலாம் என எக்ஸ் தளத்தில் அறிவித்த விமான நிலைய அதிகாரிகள், விமான நிலையத்துக்கு புறப்படும் முன், அது குறித்து விசாரித்து அறிந்துவிட்டு அதற்கேற்ப விமான நிலையம் வருமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Due to a disposal of WW 2 bomb, flight disruptions may occur @ FRA between 5 and 9 pm.
— Frankfurt Airport (@Airport_FRA) June 7, 2024
Check flight status before traveling to the airport and allow extra time for your journey. We also recommend you check in as early as possible for your flight.
More @ https://t.co/3ZVZvBiOHE pic.twitter.com/Y09A73Yh7u
இதன் பின்னர், நேற்று இரவு அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, அதைத் தொடர்ந்து A5 நெடுஞ்சாலையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டுகள் ஜேர்மனியில் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளதோடு அவை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |