வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணருக்கு இடமாற்றம்
விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் விசேட நிபுணருக்கும் அண்மையில் கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் கீழ் நன்கு பயற்சி பெற்ற வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவொன்று செயற்பட்டு வருகின்றது.
மிக நீண்ட காலமாக அதன் கட்டளை அதிகாரியாக திமுது சேனநாயக்க செயற்பட்டிருந்தார்.
இடமாற்றக் கொள்கை
உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னர் கொட்டாஞ்சேனையில் வெடிகுண்டுடன் கைவிடப்பட்டிருந்த வான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய குண்டு அச்சுறுத்தல்களை செயலிழக்கச் செய்வதில் இவரின் பங்களிப்பு இருந்துள்ளது.
எனினும், திமுது சேனநாயக்க, தற்போதைக்கு கொழும்பில் இருந்து மொனராகலை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் பொலிஸ் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
