பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Grosse déflagration rue Saint-Jacques suite à une explosion place Alphonse Laveran (face au Val de Grâce)#paris #valdegrace #incendie #explosion pic.twitter.com/BSgO6axOqm
— Etienne (@eneveu) June 21, 2023
பிரான்ஸ் தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் Rue Saint-Jacques இல் உள்ள Val de Grâce தேவாலயத்திற்கு அடுத்துள்ள கட்டடத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே இதற்கான காரணம் எனவும் பல கட்டடங்கள் தீப்பிடித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.