உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 63 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் காத்தான்குடியை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உள்ளிட்ட 4 பேர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட குறித்த 69 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam