கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: அவசர சிகிச்சைப் பிரிவில் இருவர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம்(29.09.2025) கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாழடைந்த வீடொன்றில் வெடிக்காத நிலையில் இருந்த குண்டை கழற்ற முயன்ற போது திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதில் கச்சை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொடிகாமம் சேர்ந்த ஒருவரும் 20 மற்றும் 50வயதுடையவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முத்துவேலுக்கு ஆபரேஷன் முடிந்தது.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan