புதுக்குடியிருப்பு பகுதியில் குண்டுவெடித்ததில் பெண்ணொருவர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர் குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு வைத்த போது அதிலிருந்த குண்டு வெடித்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது அவர் சிறிய காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள்
இருக்கிறதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.