கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரவும் செய்தி! பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் குண்டுத்தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரவும் செய்தியில் உண்மையில்லை என பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் ஆரம்பம்
அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பாதாள உலகக் குழுத் தலைவர் “கஞ்சிபானை இம்ரான்” உடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத்தகவல்களுக்கு அமைய, கடந்த திங்கட்கிழமை (20) ஜா-எல, கால வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam