கனடாவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் : பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
கனடாவில்(Canada) மீண்டும் குண்டு தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூத மத வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகங்கள், வர்த்தக மையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீதே குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணைகள்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு நாடு முழுவதும் குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அச்சுறுத்தல் விடும் நபர்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணைகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூத மத வழிபாட்டுத்தலங்கள், நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri