ஏமனில் வெடிகுண்டு தாக்குதல் : ஐந்து சிறுவர்கள் பலி
ஏமனின் தென்மேற்கு குடியிருப்பு பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, 5 சிறுவர்கள் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றில் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(12) இரவு இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்துக்கு ஆதரவான
அரசாங்கத்துடன் இணைந்த இஸ்லாக் கட்சியின் ஆதரவு போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இந்த சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப்பும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
வெடிப்பு சம்பவத்தை அடுத்து காயங்களுடன் குறித்த ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிப் போராளிகள் மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான ஏனைய போராளிகளுக்கு இடையிலான மோதலின் ஒரு கட்டமாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
