ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு!
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இடத்தில் குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த காணொளியில் சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்கள் பாதுகாப்பிற்காக ஓடுவது தெளிவாகக் காட்டுகிறது.
BREAKING ? Japan’s Prime Minister evacuated after blast at speech in Wakayama, local media reports pic.twitter.com/AHJppKI16m
— Insider Paper (@TheInsiderPaper) April 15, 2023
பிரதமர் கிஷிடா வகயாமா நகரில் தனது உரையை தொடங்குவதற்கு சற்றுமுன்னர் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கையெறி குண்டு வீசப்பட்டதை அடுத்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.
இதேவேளை அந்த இடத்தில் இருந்து ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
