வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டு சம்பவம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சிறிது நாட்களுக்கு முன்னர் தகராறு காணப்பட்டது. இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற குறித்த டிப்பர் சாரதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகப் பேச்சாளர் அஜித ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டகளப்பிலுள்ள இராஜங்க அமைச்சின் வீட்டின் முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
