மர்மமான முறையில் உயிரிழந்த மகன் : தந்தையின் விபரீத முடிவு
அனுராதபுரத்தில் மகன் திடீரென உயிரிழந்தமையை தாக்க முடியாத தந்தை உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
எப்பாவல, கட்டியாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய உடற்கட்டமைப்பாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி குறித்த இளைஞன் தனது வீட்டின் முன் விழுந்து கிடந்த நிலையில், அவரது இளைய சகோதரர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மர்ம மரணம்
எனினும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், அந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்தால் அவரது தந்தையும் மனம் உடைந்து விஷம் அருந்திய நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த உடற்கட்டமைப்பாளர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் குடித்துவிட்டு வந்து வீட்டின் அருகே கூச்சலிட்டதாக தெரியவந்துள்ளது.
மரண விசாரணை
எனினும், இந்த நபர் தாக்கப்பட்டரா?, அவரது உடலை வளர்க்க பயன்படுத்திய ஊக்கமருந்துகளால் பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உடல்நிலை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த உடற்கட்டமைப்பு வீரரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
