செட்டிகுளம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு
வவுனியா - செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீட்டிலிருந்து இன்று மதியம் பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட
சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி ஆகிய இருவரும் வசித்து
வந்த நிலையில் கணவன் வீட்டிலிருந்து தேவை நிமித்தம் காலையில் வெளியில்
சென்றுள்ளார்.
வெளியில் சென்ற கணவன் காலை 11 மணியளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு கணவனால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
ஜேசுதாசன் மெட்டிலம்மா என்ற 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
