கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்.. பொதுமக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனதாகச் சந்தேகிக்கப்படும், ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காண கோரிக்கை
வாகரை பொலிஸ் பகுதிக்குட்பட்ட கஜுவத்த கடற்படை முகாமிற்கு பின்னாலுள்ள கடற்கரை அண்டிய பகுதியில் 05.12.2025 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சடலம் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகரை பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அல்லது வெலிக்கந்தை புணாணை, கிரான், அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த ப்பகுதியிலாவது பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் யாராவது காணாமல் போனால் தயவு செய்து இத்தகவலைத் தெரியப்படுத்தி சடலத்தை அடையாளம் காண உதவுமாறு திடீர் மரண விசாரணையாளர் சபாபதிபிள்ளை இராசகுமார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் சடலம் இனம் காணப்படாமல் விட்டால் அரசாங்கச் செலவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam