வாய் பிலாஸ்டர் ஒன்றினால் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு!
வாய் பிலாஸ்டர் ஒன்றினால் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரகாபொல - துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் குறித்த சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது தேசிய அடையாள அட்டை ஒன்றும் உயிரிழந்தவரின் உடலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது,
இந்நிலையில், அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, குறித்த நபர் கடந்த 10ம் திகதி காணாமல் போனதாக உயிரிழந்த நபரின் மனைவி பன்னலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போனவரின் மனைவியை தொடர்பு கொண்ட பொலிஸார் உடலை அடையாளம் கண்டுள்ளனர். 43 வயதுடைய அரத்தன, உடுகம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam