வவுனியா நெளுக்குளத்திலிருந்து சடலம் மீட்பு: அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
வவுனியா (Vavuniya) நெளுக்குளம் குளத்தினுள் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன்> சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர், குளத்தினுள் சடலம் மிதப்பதினை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அவர் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இன்று (10.04.2024) காலை சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகள்
இந்நிலையில், குளக்கட்டின் மேற்பகுதியில் காலணியும் காணப்படுவதனால் தவறுதலாக குறித்த நபர் குளத்திற்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சடலமாக காணப்படும் நபர் மஞ்சள் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளதுடன் 55 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri