மன்னாரில் வீடு நோக்கி பயணித்த இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு (PHOTO)
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு, விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார்.
இந்த நிலையிலே அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், சடலத்திற்கு அருகிலிருந்து அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்தலத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri