ரிதிகல இயற்கை காப்பகத்துக்குள் படுகொலை செய்யப்பட்ட கால்நடைகளின் உடல் பாகங்கள்
அனுரதபுரம்- ரிதிகல இயற்கை காப்பகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட கால்நடைகளின் உடல் பாகங்களை வீசிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெக்கிராவையின் கனேவல்பொல பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கூடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கால்நடைகளின் எச்சங்களையே குறித்த இருவரும் காப்பகத்துக்குள் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே, கால்நடைகளின் பல சடலங்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியை வனவிலங்கு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடுமையான அச்சுறுத்தல்
இதனையடுத்து, குறித்த இரண்டு பேரும் ஏற்றி வந்த அனைத்து சடலங்களையும் குறித்த காப்பகத்துக்குள் வீசமுடியாமல் தடுக்கப்பட்டனர்.
விலங்குகளின் எச்சங்களை கொட்டுவது ரிதிகல வனவிலங்கு பாதுகாப்புப் பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வனவிலங்குகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




