யாழில் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கதிர்காமநாதன் நிரோசன் என்பவரே இன்று (15.12.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் கடந்த 13ஆம் திகதி 4மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri
