வவுனியா குளத்தில் தவறி வீழ்ந்த இளைஞன் சடலமாக மீட்பு
வவுனியா - மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி வீழ்ந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேற்படி, குறித்த இளைஞன் தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்றபோது கால் தவறி குளத்துக்குள் வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து ஊர் மக்கள் மேற்படி இளைஞனைத் தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். எனினும், கடந்த இரண்டு நாட்களாக இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தநிலையில் மேற்படி இளைஞனின் சடலம் அந்தக் குளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
