நுவரெலியாவில் நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் இன்று(01.04.2025) மீட்கப்பட்டுள்ளது.
டயகம, போட்மோர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
குறித்த சடலம் விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை(30.03.2025) முதல் காணாமல் போய் இருந்த நிலையில், டயகம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
