குழந்தையை காணாது தேடிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
அநுராதபுரம், கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் தந்தை நேற்றைய தினம் (23.08.2026) கல்னேவ பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
இதனடிப்படையில், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்னர்.
இதன்போது, வீட்டின் அருகில் கால்வாயொன்றின் பாலத்தின் அடியில் குழந்தை சிக்குண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை முன்னெடுப்பு
பின்னர் உடனடியாக கல்னேவ மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட போதிலும், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குழந்தையின் சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening